கோவை: நள்ளிரவு குப்பை அகற்ற முயற்சி.. 4 லாரிகள் சிறைபிடிப்பு

520பார்த்தது
கோவை அவிநாசி சாலை அரசூரில் உள்ள ஊராட்சி இடுகாட்டில் இருந்து நள்ளிரவில் அனுமதியின்றி குப்பைகளை அள்ளிச் செல்ல முயன்ற 4 லாரிகளை பொதுமக்களும் பாஜகவினரும் நேற்று இரவு சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. குப்பைகளை முழுமையாக அகற்றி சுகாதார சீர்கேட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தகவலறிந்து வந்த நீலாம்பூர் போலீசார் லாரிகளை காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.

தொடர்புடைய செய்தி