கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன், பள்ளி மேம்பாட்டு திட்டத்தை எதிர்ப்பது தேவையற்றது என்றும், கொள்கை முடிவுகளை
அரசியல் கோணத்தில் பார்க்கக் கூடாது என்றும் தெரிவித்தார். கூட்டணி கட்சிகளின் அழுத்தத்தினாலேயே
விஜய் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், “தி. மு. க தோற்க வேண்டும் என்பதே நடந்துள்ளது” என்றும் கூறினார். சனாதனம் குறித்து
விஜய் தெளிவான நிலைப்பாடு எடுக்க வேண்டும் என வலியுறுத்திய அவர், கிட்னி திருட்டு குற்றச்சாட்டு விசாரணையை விரைவுபடுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.
அண்ணாமலை மீண்டும் மாநில தலைவராவாரா என்ற கேள்விக்கு பதிலளிக்காமல் சென்றார்.