கோவை சரவணம்பட்டி, காட்டூர், ரத்தினபுரி, கோவில்பாளையம், அன்னூர் பகுதிகளில் நடந்த குற்றச்சம்பவங்கள் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். இதில் ரவீந்தர் மற்றும் அலன் சாம் ஆகியோர் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. இருவரும் கரட்டுமேடு பகுதியில் அதிவேகமாக சென்றபோது விபத்தில் சிக்கி காயமடைந்தனர். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விசாரணையில், இருவரும் சிறையில் பழகி, வெளியே வந்ததும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டது உறுதியானதால், போலீசார் இருவரையும் கைது செய்து, தற்போது மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகின்றனர்.