கோவை: போதைப்பொருள் அதிரடி சோதனை: 24 பேர் கைது

1பார்த்தது
கோவை மாவட்டத்தில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் நேற்று அதிரடி சோதனை நடத்தப்பட்டது. 120 இடங்களில் 300 போலீசார் ஈடுபட்ட இந்த சோதனையில் 24 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 5 பேர் கல்லூரி மாணவர்கள் ஆவர். மெத்தாம்பெட்டமின் 10.35 கிராம், கஞ்சா 4 கிலோ, கஞ்சா சாக்லேட், கஞ்சா ஆயில் மற்றும் 22 இருசக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டன. இது குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி