கோவை: விமான நிலையத்தில் இ-சிகரெட் பறிமுதல்

475பார்த்தது
கோவை சர்வதேச விமான நிலைய வளாகத்தில் மத்திய புலனாய்வுத் துறையினர் நடத்திய சோதனையில், ஷார்ஜாவிலிருந்து வந்த 11 பயணிகளிடம் இருந்து ரூ. 65.99 லட்சம் மதிப்புள்ள 3,48,000 சிகரெட்டுகள், 895 இ-சிகரெட்டுகள் மற்றும் 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட பொருட்கள் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடத்தல் முயற்சிகளை தடுக்க விமான நிலையங்களில் சோதனைகள் மேலும் கடுமையாக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி