கோவை: வெயிலை சமாளிக்க யானைக்கு சவர் குளியல் வசதி

0பார்த்தது
கோவை பேரூரில் உள்ள அருள்மிகு பட்டீஸ்வரர் திருக்கோவிலில், கல்யாணி யானையை கோடை வெப்பத்திலிருந்து பாதுகாக்க கோவில் நிர்வாகம் புதிய சவர் வசதியை ஏற்படுத்தியுள்ளது. யானை குளிக்கும் தொட்டியருகே பலமுனை தானியங்கி சவர்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலிருந்து கொட்டும் குளிர்ந்த நீரில் கல்யாணி யானை தும்பிக்கையை உயர்த்தி ஆனந்தமாக குளித்து மகிழ்கிறது. தினமும் காலை, மாலை இருவேளையும் இந்த சிறப்பு குளியல் வழங்கப்படுகிறது. இந்த ஏற்பாடு யானையின் நலனை கருத்தில் கொண்டு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி