கோவை: தொழிற்சாலை மாசு - மக்கள் மனு!

0பார்த்தது
கோவை மாவட்டம் அன்னூர் தாலுகாவிற்கு உட்பட்ட அச்சம்பாளையம், திருவள்ளுவர் நகர் பகுதிகளில் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நச்சுப் புகை மற்றும் ரசாயனக் கழிவுகளால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் இப்பகுதியில் இயங்கி வரும் தனியார் உணவு நிறுவனம் உள்ளிட்ட தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் நச்சு புகை, ரசாயன கலந்த கழிவுத் துகள்கள் காரணமாக துர்நாற்றம் வீசுவதுடன், பொதுமக்களுக்கு சுவாசக் கோளாறுகள் ஏற்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் தலையிட வேண்டும் என 50-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் நேற்று மனு அளித்துள்ளனர். பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டிய அவர்கள், விரைவில் தீர்வு கிடைக்காவிட்டால் தேர்தலை புறக்கணித்து, அரசு வழங்கிய அடையாள அட்டைகளை திருப்பி அளிப்போம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி