கோவை: மதுபோதையில் கார் ஓட்டி ஐ. டி. ஊழியர் உயிரிழப்பு

10பார்த்தது
கோவை: மதுபோதையில் கார் ஓட்டி ஐ. டி. ஊழியர் உயிரிழப்பு
கோவை – சத்தி சாலை சர்வீஸ் ரோட்டில் நடந்த விபத்தில் ஐ.டி. நிறுவன ஊழியர் மணிகண்டன் (32) உயிரிழந்தார். கீரணத்தம் பகுதியைச் சேர்ந்த ஜெய்கிருஷ்ணன் (20) மதுபோதையில் காரை கட்டுப்பாட்டை இழந்து ஓட்டி, சாலை கடக்க நின்றிருந்த கார்த்தி (30), அவரது மனைவி காயத்ரி (27) மீது மோதி, பின்னர் நடைபயணிகளான மணிகண்டன், விமல்ராஜ், அஜித்குமார் மீதும் மோதியதில் மணிகண்டன் உயிரிழந்தார். காயமடைந்த மற்றவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெய்கிருஷ்ணனை கைது செய்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி