கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். நாளை பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபின் கோயம்புத்தூர் வந்து பல நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். அவர் கோவில்களில் தரிசனம் செய்யவுள்ளதுடன், தமிழக அரசியல் நிலை குறித்து நடைபெறும் மையக்குழு கூட்டத்திலும் கலந்துகொள்வார். அதிமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து இதுவரை எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்றும், சென்சார் போர்டு, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ஆகியவை சுயாதீன அமைப்புகள் என்றும் அவர் தெரிவித்தார். ஜனநாயகன் படத்திற்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவிப்பது, அந்தக் கட்சி நடிகர் விஜயை நோக்கி நகர்வதைக் காட்டுவதாகவும், தொகுதி பங்கீடு விவகாரம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியுடன் பேசி சுமுகமாக தீர்க்கப்படும் என்றும் கூறினார்.