கோவை: ஜெயலலிதா ஆத்மா தண்டனை கொடுக்கிறது – செங்கோட்டையன்

61பார்த்தது
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக வெற்றி கழக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளரும் அமைச்சருமான செங்கோட்டையன், தமிழக வெற்றி கழக ஆட்சி மக்கள் விரும்பிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளதாக தெரிவித்தார். 200 யூனிட் இலவச மின்சாரம், பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட பல திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாக அவர் கூறினார். மேலும், அத்திக்கடவு–அவினாசி திட்ட விழாவில் ஜெயலலிதா படத்தை புறக்கணித்தவரின் நிலை இன்று மோசமாகிவிட்டதாகவும், ஜெயலலிதாவின் ஆத்மா அவருக்கு தண்டனை கொடுக்கிறது என்றும் கடுமையாக விமர்சித்தார்.

தொடர்புடைய செய்தி