கோவை: நகைப்பட்டறை ஊழியர் நிலைதடுமாறி விழுந்து பலி

84பார்த்தது
கோவை: நகைப்பட்டறை ஊழியர் நிலைதடுமாறி விழுந்து பலி
கோவை பெரியக்கடைவீதி லாலா சந்து மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த மணிகண்டன் (34), என்ற நகைப்பட்டறை ஊழியர், உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று பெரியக்கடைவீதி பகுதியில் நடந்து சென்றபோது திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்தார். 

இந்த விபத்தில் படுகாயமடைந்த அவரை அப்பகுதியினர் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி மணிகண்டன் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து பெரியக்கடைவீதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.