கோவை: துணிக்கடையில் திருடிய கூலித்தொழிலாளி கைது

0பார்த்தது
கோவை: துணிக்கடையில் திருடிய கூலித்தொழிலாளி கைது
தூத்துக்குடி மாவட்டம் அண்ணா நகரைச் சேர்ந்த பாலசுந்தர் (54) என்ற கூலித்தொழிலாளி, காரமடை டீச்சர்ஸ் காலனியில் உள்ள துணிக்கடையில் ரூ. 15 ஆயிரம் ரொக்கம் மற்றும் 10 சேலைகள் திருடியதாக நேற்று கைது செய்யப்பட்டார். விசாரணையில், அவர் மீது தூத்துக்குடி, விருதுநகர், திண்டுக்கல், பழனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திருட்டு மற்றும் கஞ்சா வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. அவரிடமிருந்து 3 சேலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி