கோவை: மஹா சிவராத்திரி விழா: பூவிளக்கு ஏந்தி அம்மன் ஊர்வலம்

303பார்த்தது
கோவை பி. கே. புதூர் கே. பி. ஆர். காலனி பகுதியில் 11ஆம் ஆண்டாக மஹா சிவராத்திரி விழா நேற்று இரவு சிறப்பாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு ஸ்ரீ கொடுங்கலூர் பகவதி அம்மன் தொடர்பான பாட்டும் கதையும் நிகழ்ச்சி நடைபெற்றது. சத்தியா நகர் பகுதியில் உள்ள ஸ்ரீ சக்தி விநாயகர் கோவிலில் இருந்து அம்மன் பால் செம்பில் அருளெழுந்து, பூவிளக்கு தாளம் ஏந்தி ஊர்வலமாக புறப்பட்டார். ஊர்வலம் ராமாஜநகர் வழியாக கே. பி. ஆர். காலனி ஸ்ரீ சாந்தி விநாயகர் கோவிலை வந்தடைந்தது. செண்டை மேளம் முழங்க அம்மன் பரவசமாக ஆடியபடி பக்தர்களுக்கு அருள் வழங்கினார். தொடர்ந்து சாமிநாதன், கண்ணப்பன் குழுவினரின் அம்மன் பிறப்பை விளக்கும் பாட்டும் கதையும் நடைபெற்றது. சிலப்பதிகாரத்தில் போற்றப்படும் கண்ணகி, மலையாள மொழி பேசும் மக்களின் குலதெய்வமாக கொடுங்கலூர் பகவதி அம்மனாக வழிபடப்படுவது குறிப்பிடத்தக்கது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, விடிய விடிய அம்மன் பாட்டும் கதையும் கேட்டு பக்தியுடன் வழிபட்டனர்.

தொடர்புடைய செய்தி