கோவை நீலாம்பூரில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில், ஜிஎஸ்டி 2.0 வரி சீராய்வு மற்றும் வரிக்குறைப்பு நடவடிக்கைகளுக்காக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு நேற்று பாராட்டு விழா நடைபெற்றது. தலைவர் விக்ரம ராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாநிலம் முழுவதும் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட வணிகர்கள் கலந்துகொண்டனர். வணிகர் சங்கப் பிரதிநிதிகள், ஜிஎஸ்டி வரிக்குறைப்புக்கு நன்றி தெரிவித்து, சிறு வணிகர்களுக்கான பென்ஷன் திட்டம், அபராதம் மற்றும் பதிவு நடைமுறைகள் எளிமைப்படுத்தல் உள்ளிட்ட 33 அம்ச கோரிக்கை மனுவை நிதியமைச்சரிடம் ஒப்படைத்தனர். நிர்மலா சீதாராமன், வரிக்குறைப்பு நடவடிக்கையால் மக்களின் வாங்கும் திறன், வணிக வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளதாகவும், வருமானவரி மற்றும் ஜிஎஸ்டி பதிவு நடைமுறைகளை மேலும் எளிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.