கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிச்சாமி மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் விமர்சனங்களுக்கு பதிலளித்தார். கோபி பொதுக்கூட்டத்தில் தன்னை சுயநலவாதி என விமர்சித்த எடப்பாடி குறித்து, அவர் பெரிய தலைவர் அல்ல; அவருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்தார். உதயநிதியின் கட்சி மாறவில்லை; பிரான்ச் மட்டுமே மாறியது என்ற கருத்து குறித்து, யார் வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் சொல்லட்டும்… நான் தெளிவாக உள்ளேன் என தெரிவித்தார். மேலும் எடப்பாடி கூறிய கோபி செட்டிபாளையத்தில் வெற்றி விழா குறித்தும், தேர்தலில் மக்கள் தீர்ப்பளிப்பார்கள்… காத்திருந்து பாருங்கள், என்று செங்கோட்டையன் பதிலளித்தார்.