கோவை சரவணம்பட்டியைச் சேர்ந்த பெண்ணிடம் ஆன்லைன் மூலம் 10 லட்சம் ரூபாய் மோசடி செய்த தம்பதி உட்பட மூன்று பேர் சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். பங்குச் சந்தையில் அதிக லாபம் தருவதாகக் கூறி, பல தவணைகளாகப் பணம் பெற்றுக்கொண்டு, லாபத்தையும் முதலீட்டுத் தொகையையும் திருப்பித் தராமல் ஏமாற்றியுள்ளனர். சிபுகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், இதே குழு தென்காசி, திருச்சி, கன்னியாகுமரி, நாமக்கல், ஆந்திரா உள்ளிட்ட பல இடங்களிலும் இதேபோல் மோசடி செய்திருப்பதை கண்டுபிடித்தனர். இதனைத் தொடர்ந்து, திருவள்ளூரைச் சேர்ந்த ராஜு முகமது அனீப், அவரது மனைவி அன்னு மற்றும் ஒருவரை தென்காசி சைபர் கிரைம் போலீசார் கைது செய்து, கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.