கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், இன்று (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பல பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வெரைட்டிஹால் ரோடு, டவுன்ஹால், டி.கே. மார்க்கெட், ஒப்பணக்கார வீதி, செல்வபுரம், கெம்பட்டி காலனி, கரும்புக்கடை, ஆத்துப்பாலம், உக்கடம், சுங்கம் பைபாஸ் ரோடு, சண்முகா நகர், ஆல்வின் நகர், இந்திரா நகர், பாரி நகர், டாக்டர் முனிசாமி நகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகள், ஸ்டேட் பேங்க் ரோடு, கலெக்டர் அலுவலகம், ரயில் நிலையம், அரசு ஆஸ்பத்திரி, லாரிப்பேட்டை ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து செயற்பொறியாளர் சிவதாஸ் தெரிவிக்கையில், மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த மின் தடை ஏற்படுகிறது. பொதுமக்கள் இதனை கருத்தில் கொண்டு தங்களது மின் உபயோகம் தொடர்பான பணிகளை முன்னரே முடித்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் எனத் தெரிவித்தார்.