மதுக்கரை காக்காசாவடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குட்டி கவுண்டன்பாதியை சேர்ந்த வடிவேல் மகள் மைவிழி, கடந்த 13ஆம் தேதி முதல் காணாமல் போனதாக அவரது பெற்றோர் 15ஆம் தேதி போலீசில் புகார் அளித்தனர். போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டிய உறவினர்கள், நேற்று காவல் நிலையம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து போலீசார், செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளதால் விசாரணையில் தாமதம் ஏற்பட்டுள்ளது; விரைவில் மைவிழியை கண்டுபிடிப்போம் என தெரிவித்தனர்.