கோவை ரங்கே கவுடர் வீதியை சேர்ந்தவர் மங்கைலால் (62). இவர் ஆர்ஜி வீதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த 5ம் தேதி இரவு வியாபாரத்தை முடித்து கடையை பூட்டி வீட்டிற்கு சென்றார். மறுநாள் காலை மளிகை கடைக்கு அருகில் கடை நடத்தி வரும் ஒருவர் மங்கைலாலுக்கு போன் செய்து மளிகை கடையின் பின்புற கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மங்கைலால் உடனே கடைக்கு வந்தார். உள்ளே சென்று பார்த்தபோது கடையின் கல்லா பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ரூ. 1 லட்சத்து 40 ஆயிரம் திருட்டுப் போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து மங்கைலால் வெரைட்டி ஹால் ரோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.