கோவை அருகே கருமத்தம்பட்டியில் சர்வதேச கராத்தே அமைப்பின் கோவை மாவட்ட கிளை சார்பில் மாநில அளவிலான கியோகுஷின் கராத்தே போட்டி கடந்த இரண்டு நாட்கள் நடைபெற்றது. இதில் கோவை, சென்னை, திருப்பூர், கன்னியாகுமரி, சேலம், மதுரை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். 5 முதல் 13 வயது வரையிலான பிரிவு மற்றும் பொதுப்பிரிவு என இரண்டு பிரிவுகளில் கட்டா மற்றும் குமித்தே போட்டிகள் நடத்தப்பட்டன. மாணவர்களுக்கு இணையாக மாணவிகளும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு சிறப்பாகப் பங்கேற்றனர். தற்காப்புக் கலையில் மாணவிகள் அதிக ஆர்வம் காட்டி வருவதாகவும், போட்டி சிறப்பாக நடைபெற்றதாகவும் ஒருங்கிணைப்பாளர்கள் ஆனந்தலால் ராஜூ மற்றும் ஆண்டனி ஜஸ்டின் தெரிவித்தனர்.