கோவை: மாணவிக்கு தேசிய கராத்தே போட்டியில் வெள்ளி

2பார்த்தது
புனேவில் நடைபெற்ற 69-ஆவது தேசிய அளவிலான பள்ளிக்கல்வி குழும கராத்தே போட்டியில், கோவை சிங்கின் ஸ்போர்ட்ஸ் கராத்தே அகாடமி மற்றும் கீதாஞ்சலி பள்ளியைச் சேர்ந்த 9-ஆம் வகுப்பு மாணவி வினுமித்ரா, 17 வயதுக்குட்பட்ட குமித்தே பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார். பல மாநில மாணவர்கள் பங்கேற்ற இப்போட்டியில் பதக்கம் வென்ற மாணவிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரது சாதனைக்காக தமிழக அரசு ரூ. 1.5 லட்சம் கல்வி ஊக்கத்தொகை அறிவித்துள்ளது. கராத்தே போட்டிகளை முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் சேர்க்க வேண்டும் என பயிற்சியாளர் கணேஷ்மூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி