கோவை மாவட்டம் சூலூர் அருகே மோப்பிரிபாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட வாகராயன் பாளையத்தில், மகளிர் தினத்தை முன்னிட்டு 'வெல்லும் தமிழ் பெண்கள்' என்ற தலைப்பில் நேற்று பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. திமுக மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், நகர செயலாளர் சசிகுமார் மற்றும் மாநகர மேயர் ரேணுகா தேவி ஆகியோர் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். வாகராயன் பாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து 2,000-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு, பெண்களுக்கான அரசு திட்டங்களை எடுத்துரைக்கும் பேனர்களுடன் ஊர்வலமாகச் சென்றனர். தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பெண்கள் முன்னேற்றத்திற்கான அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து பேசப்பட்டது. நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.