கோவை இறைச்சி மற்றும் மீன் சந்தைகளில் இன்று (8. 2. 2026) நிலவும் விலைகள் வெளியிடப்பட்டுள்ளன. பிராய்லர் கோழி கறி கிலோ 240-260 ரூபாய்க்கும், நாட்டு கோழி கறி கிலோ 710-850 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. ஆட்டிறைச்சி கிலோ 1000-1250 ரூபாய் வரை விற்கப்படுகிறது. உக்கடம் மீன் சந்தையில், பெரிய வஞ்சிரம் மீன் கிலோ 1300 ரூபாய் வரையிலும், வாவல் மீன் 1100 ரூபாய் வரையிலும், பாறை மீன் 320-600 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.