கோவை: ஊர்ஜா கலை விழா – உயர்ரக கார்கள் அணிவகுப்பு

277பார்த்தது
கோவையில் உள்ள ஸ்ரீ நாராயண குரு கல்லூரியில் நேற்று ஊர்ஜா கலை விழா கோலாகலமாக நடைபெற்றது. ஸ்ரீ நாராயண குரு கல்வி அறக்கட்டளை தலைவர் வழக்கறிஞர் சாத்து குட்டி மற்றும் செயலர் ஸ்ரீஹரி ஆகியோர் விழாவைத் தொடங்கி வைத்தனர். கல்லூரி முதல்வர் முனைவர் கல்பனா வரவேற்புரை ஆற்றினார். விழாவில் உயர்ரக கார்கள் அணிவகுப்பு, சாகச நிகழ்ச்சிகள், மாணவர்களின் ஆடல்-பாடல் மற்றும் ராப் இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
Job Suitcase

Jobs near you