கோவையில் நேற்று நடைபெற்ற நிகான் ஷோட்டோகான் கராத்தே சாம்பியன்ஷிப் மாநில அளவிலான போட்டியை நடிகர் பெஞ்சமின் துவக்கி வைத்தார். மை கராத்தே இன்டர்நேஷனல் நிறுவனத்தின் 20ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்தப் போட்டியில் பல மாவட்டங்களைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர். துவக்க விழாவில் பேசிய நடிகர் பெஞ்சமின், உடல் நலத்தைப் பேணுவதில் விளையாட்டுகளின் முக்கியத்துவத்தையும், போட்டியில் பங்கேற்ற குழந்தைகளின் ஆர்வத்தையும் பாராட்டினார். மேலும், நடிகர் விஜயின் அரசியல் வருகையை வரவேற்பதாகவும், அவர் தமிழகத்தை ஆள வாய்ப்புள்ளது என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.