கோவை: யோகா, சிலம்ப சாதனை: கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிப்பு

0பார்த்தது
கோவை கருமத்தம்பட்டி பார்க் கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்ற யோகா மற்றும் திறன் வெளிப்பாட்டு நிகழ்ச்சியில், 8 முதல் 18 வயதுடைய 21 மாணவர்கள் கடினமான யோகாசனங்கள் மற்றும் சிலம்ப பயிற்சிகளை செய்து அசத்தினர். சக்ராசனம், உஸ்த்ராசனம் உள்ளிட்ட ஆசனங்களுடன் உடல் நெகிழ்வு, சமநிலை மற்றும் வேக திறன்களையும் வெளிப்படுத்தினர். பல மாத பயிற்சிக்குப் பிறகு சாதனை படைத்த இவர்களின் திறமைகள் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்யப்பட உள்ளதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி