அதிகாலை முதலே கோவையில் வெளுத்து வாங்கும் மழை!

0பார்த்தது
கோவை மாநகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை முதல் மிதமான மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. காந்திபுரம், ராமநாதபுரம், புலியகுளம், உக்கடம், ஆத்துப்பாலம், ரேஸ்கோர்ஸ் உள்ளிட்ட நகரப் பகுதிகளிலும், கவுண்டம்பாளையம், துடியலூர், ஜி. என். மில் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் மழை பதிவாகியுள்ளது. மேலும் கணுவாய், தடாகம், மாங்கரை, பன்னிமடை உள்ளிட்ட எல்லைப்பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. மழையால் இருசக்கர வாகன ஓட்டிகள் ரெயின் கோட் அணிந்தும், பொதுமக்கள் குடை பிடித்தும் பயணம் மேற்கொள்கின்றனர்.

தொடர்புடைய செய்தி