காரமடை: 120 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

கோவை மாவட்ட காரமடை காவல் நிலைய போலீசார், அன்னூர்-காரமடை சாலையில் சோதனை நடத்தி, திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சல்மான் (27), கோவில்பாளையத்தைச் சேர்ந்த ஜாக்சன் ஆஷிர் (25), மற்றும் மனோகரன் (44) ஆகியோரிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் மற்றும் ஒரு ஆட்டோவை பறிமுதல் செய்தனர். காவல்துறையினர் மூவரையும் நேற்று கைது செய்து நீதிமன்ற காவலில் அனுப்பியுள்ளனர். போதைப்பொருள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.
