கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில், நேற்று இரவு 10 மணிக்குப் பிறகும் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுகிறதா என கருமத்தம்பட்டி காவல் ஆய்வாளர் தலைமையில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. பல்வேறு கடைகள் மற்றும் பார்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட நிலையில், விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.