பொள்ளாச்சி அரசு பஸ்சில் "தமிழ்நாடா, பீகாரா?" என எழுதப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்புறங்களுக்கு அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், மதுரை கோட்டத்துக்கு உட்பட்ட தேவாரம் - மேட்டுப்பாளையம் செல்லும் பேருந்து பொள்ளாச்சிக்கு வந்தபோது, அதன் "அரசு போக்குவரத்து கழகம்" என எழுதப்பட்டிருந்த இடத்தில், சிவப்பு மையால் "தமிழ்நாடா, பீகாரா?" என எழுதப்பட்டிருந்தது. இந்த வாசகம் அழிக்கப்படாமல் பேருந்து இயக்கப்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.