கோவையில் டாஸ்மாக் பணியாளர்கள் தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கூடுதல் ரூ. 10 ஸ்டிக்கர் கட்டணம், காலி பாட்டில் திரும்பப்பெறும் திட்டம், பணி பாதுகாப்பு, ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக அதிகாரிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், இந்த
போராட்டம் நடைபெற்றது. இதன் காரணமாக கோவையில் 214-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாமல் இருந்தன. இது குறித்து விரைவில் அடுத்தகட்ட அறிவிப்பு வெளியிடப்படும் என சங்கத்தினர் தெரிவித்தனர்.