கவுண்டம்பாளையம் - Kavundampalayam

கோவையில் தரமற்ற ஹெல்மெட்டுகள் பறிமுதல்

கோவை: இந்திய தர நிர்ணய அமைவனம் (BIS) சார்பில், இயக்குநர் கே. ரமேஷ் தலைமையிலான அதிகாரிகள் குழு, கோவையில் திடீர் ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வில், ஐஎஸ்ஐ முத்திரையில்லாத தரமற்ற ஹெல்மெட்டுகள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதனையடுத்து, நேற்று தரமற்ற ஹெல்மெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு, கடை உரிமையாளர் மீது BIS சட்டம் 2016 பிரிவு 28ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பொதுமக்கள் பொருட்களை வாங்கும் முன் BIS Care செயலி மூலம் தரத்தை உறுதி செய்ய வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

வீடியோஸ்


మహబూబ్‌నగర్ జిల్లా