கோவை: திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது

80பார்த்தது
கோவை: திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது
கோவை போத்தனூர் சீனிவாசன் நகரை சேர்ந்தவர் வாசுதேவ்(42). இவர், அங்குள்ள ரங்கநாதபுரத்தில் புதிய வீடு கட்டி வருகிறார். இதன் கட்டுமான பணிக்காக வீடு முன் இரும்பு கம்பிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், கடந்த 16ம் தேதி இரவு அங்கு வந்த மர்ம நபர்கள் 100 கிலோ இரும்பு கம்பிகளை சரக்கு வாகனத்தில் ஏற்றி திருடி சென்றனர். இதுகுறித்து வாசுதேவ் சுந்தராபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் இரும்பு கம்பிகளை திருடியது குனியமுத்தூர் செந்தமிழ் நகரை சேர்ந்த அஜித்குமார் (24), குனியமுத்தூர் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த அப்துல் சமது (26) மற்றும் குனியமுத்தூர் மேட்டுக்காட்டை சேர்ந்த ஆறுமுகவேல்(28) என்பது தெரியவந்தது. போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து இரும்பு கம்பி, சரக்கு வாகனம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Job Suitcase

Jobs near you