சரவணம்பட்டி வரதராஜ் நகர் பகுதியில் இளம் பெண்களை வைத்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்த 3 பேரை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர். சரவணம்பட்டி போலீசார் வரதராஜ் நகர் பகுதியில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு விபச்சாரம் நடப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில், போலீசார் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதையடுத்து, விபச்சாரத்தில் இளம் பெண்களை ஈடுபடுத்தி வந்தது உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாப்பநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த ஜெயந்த்குமார் (28), சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஆனந்தகுமார் (33), மற்றும் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த நதி சர்க்கார் (27) ஆகிய மூன்று பேரையும் சரவணம்பட்டி போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர். இப்பகுதியில் விபச்சார தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என்றும் அவர்கள் கூறினர்.