கோவை: லாரி மோதி 5 மின்கம்பங்கள் சேதம்

4பார்த்தது
கோவை: லாரி மோதி 5 மின்கம்பங்கள் சேதம்
கோவை, போத்தனூர்–செட்டிப்பாளையம் சாலையில் அன்புநகர் அருகே குப்பை ஏற்றிச் சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓர மின்கம்பத்தில் மோதியது. இந்த விபத்தில் 5 மின்கம்பங்கள் சேதமடைந்தன. இதனால் அன்புநகர், நபிநகர், செட்டிப்பாளையம் பிரிவு உள்ளிட்ட பகுதிகளில் நள்ளிரவு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு மக்கள் அவதிப்பட்டனர். மின்வாரிய ஊழியர்கள் உடனடியாக மின்விநியோகத்தைத் துண்டித்து, உடைந்த கம்பங்களை அகற்றி புதிய கம்பங்களை நட்டும் பணியில் ஈடுபட்டனர். பெரிய உயிரிழப்பு தவிர்க்கப்பட்டதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து போத்தனூர் போலீசார் மற்றும் மின்சார வாரியம் சார்பில் விசாரணை நடைபெற்று வருகிறது.