முன்னாள் எம்.எல்.ஏ. பொள்ளாச்சி ஜெயராமனின் தாயார் மே 15ஆம் தேதி உயிரிழந்தார். அவரது இல்லத்திற்கு ஆறுதல் தெரிவிக்க நேற்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி சென்றபோது, அங்கு கூடியிருந்த தொண்டர் ஒருவர் 'இவர்களெல்லாம் துரோகிகள்' என குரல் எழுப்பியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரை சமாதானப்படுத்தியதையடுத்து நிலைமை சீரானது.