கோவை சிங்கநல்லூர் ரங்கபுரத்தைச் சேர்ந்த அமுதா (வயது 35) என்பவர் கோவை மாநகராட்சி 58-வது வார்டு ஒண்டிப்புதூரில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், சம்பவத்தன்று கோவை சிங்கநல்லூர் ஹைவேகாலனியைச் சேர்ந்த ஜெயா (வயது 50) என்பவர் வார்டு அலுவலகத்திற்கு வந்து அமுதாவிடம் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது திடீரென இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக, அவர்கள் பொது இடத்தில் அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் பேசிக்கொண்டதாகத் தெரிகிறது. இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், ஜெயா மற்றும் அமுதா ஆகியோர் மீது சிங்கநல்லூர் போலீசார் நேற்று வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.