கோவை மாவட்டம் சூலூர் அருகே காரணம்பேட்டை–உக்கடம் அரசு பேருந்தில், நேற்று பள்ளி முடிந்து காத்திருந்த மாணவர்களை ஏற்றாமல் நடத்துனர் திடீரென ஹைட்ராலிக் கதவை மூடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பேருந்தில் ஏற முயன்ற மாணவன் அதிர்ஷ்டவசமாக தப்பினார்; அவரது பை கதவில் சிக்கியது. பின்னர் ஓட்டுநர் கதவைத் திறந்து மாணவர்களை ஏற்றினார். இந்த சம்பவம் வீடியோவாக வைரலாகி, பொறுப்பற்ற ஊழியர்கள் மீது நடவடிக்கை கோரி பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.