கோவை: SC/ST வழக்கில் குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை

1பார்த்தது
கோவை: SC/ST வழக்கில் குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் 65 வயது மூதாட்டியை ஜாதியை குறிப்பிட்டு திட்டிய வழக்கில் குற்றவாளி கனகராஜ் (43)க்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் ரூ. 3,000 அபராதமும் விதிக்கப்பட்டது. கடந்த 2024ல் கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில், காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் மூன்று நாட்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்ற நிலையில், நீதிபதி நேற்று தீர்ப்பு வழங்கினார்.

தொடர்புடைய செய்தி