கோனியம்மன் கோயிலில் பக்தர்களுக்கான ஆடை கட்டுப்பாடு அறநிலையத்துறை மூலம் அமல்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டு மற்றும் வெளிமாநில பக்தர்கள் சிலர் பொருத்தமற்ற உடையுடன் வருவதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆண்கள் வேட்டி, சட்டை அல்லது பேண்ட் அணிந்தும், பெண்கள் புடவை, தாவணி அல்லது துப்பட்டாவுடன் கூடிய சுடிதார் அணிந்தும் வர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விதிகளை கண்காணிக்க கோயில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.