நேற்று மாலை சின்னியம்பாளையத்தில் நடைபெற்ற அதிமுக 54வது ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டத்தில், சட்டமன்ற உறுப்பினர் வி. பி. கந்தசாமி தலைமையில் முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி சிறப்புரையாற்றினார். விமான நிலைய விரிவாக்க திட்டத்திற்கு உரிய மதிப்பீட்டுடன் நிலம் கொடுத்த மக்களுக்கு இழப்பீடு வழங்கியவர் எடப்பாடியார் என அவர் பெருமிதம் தெரிவித்தார். மேலும், திமுக அரசு சொத்துவரி, மின்கட்டண உயர்வை மட்டுமே சாதனையாகக் கொண்டுள்ளது என்றும், அதிமுக ஆட்சியில் கோவைக்கு பல வளர்ச்சிப் பணிகள் செய்யப்பட்டதாகவும் அவர் திமுக அரசை கடுமையாக விமர்சித்தார்.