கோவை: உணவு தேடிய யானை - வீடியோ வைரல்!

0பார்த்தது
கோவை மாவட்டம் தடாகம் அடுத்த வரபாளையம் பகுதியில் கார்த்திகேயன் என்பவரின் தோட்டத்து வீட்டிற்குள் உணவு தேடி நுழைந்த ஒற்றை காட்டு யானை, மின்விளக்கு வெளிச்சம் கண்டதும் பின்வாங்கியது. நாய்கள் குரைத்ததால் வீட்டு உரிமையாளர் மின்விளக்கை போட்டதும் யானை பயந்து சென்றது. இந்த சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகி தற்போது வெளியாகியுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் காட்டு யானைகள் ஊருக்குள் நுழைந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால், கோடைகாலம் நெருங்கிவரும் நிலையில் வனப்பகுதிகளிலேயே விலங்குகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் வசதி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி