கோவை: பார்க் கல்லூரியில் உற்சாகமான பொங்கல் விழா

5பார்த்தது
கோவை கணியூர் பகுதியில் உள்ள பார்க் கல்லூரியில் நேற்று தமிழர்களின் பாரம்பரிய பொங்கல் திருவிழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. கல்லூரி வளாகத்தில் மண் பானையில் பொங்கல் வைத்து, சூரிய வழிபாடு நடைபெற்றது. உரி அடித்தல், கயிறு இழுத்தல், கும்மி, ஒயிலாட்டம் போன்ற கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கொங்கு மண்ணின் பாரம்பரிய துடும்பு இசைக்கு மாணவ-மாணவியர் நடனமாடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகின. பாஜக விளையாட்டுப் பிரிவு மாநில செயலாளரும், கல்லூரி தலைமை செயல் அதிகாரியுமான அனுஷா ரவி விழாவில் கலந்துகொண்டு மாணவர்களை உற்சாகப்படுத்தினார். தமிழர் கலாச்சாரத்தை பறைசாற்றும் வகையில் இந்த விழா அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

தொடர்புடைய செய்தி