கோவை: தங்கச் சங்கிலியை ஒப்படைத்த தூய்மைப் பணியாளருக்கு பாராட்டு

415பார்த்தது
கோவை சாய்பாபா காலனியில் தூய்மைப் பணியாளராக பணிபுரியும் சக்திவேல் (47), குப்பையில் கிடந்த மூன்றரை சவரன் தங்கச் சங்கிலியை அதன் உரிமையாளரிடம் நேர்மையுடன் ஒப்படைத்து பாராட்டுகளைப் பெற்றுள்ளார். சித்தாபுதூரைச் சேர்ந்த அவர், குப்பை தரம் பிரிக்கும் போது சங்கிலியைக் கண்டுபிடித்து உடனடியாக மூதாட்டியிடம் வழங்கினார். அவரது நேர்மையை பாராட்டி நிறுவனம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சால்வை அணிவித்து, நேற்று பரிசு வழங்கி கௌரவித்தனர்.

தொடர்புடைய செய்தி