கோவை: கல்லறை திருநாள் அனுசரிப்பு!

1பார்த்தது
கோவை திருச்சி சாலையில் உள்ள சி.எஸ்.ஐ. கல்லறை தோட்டத்தில் நேற்று கல்லறை திருநாளையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. ஆயர் அருட்திரு விகேஷ் மார்க்கஸ் தலைமையில் நடைபெற்ற இந்த ஜெபத்தில், கிறிஸ்தவ மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் முன்னோர்களின் கல்லறைகளை சீரமைத்து, மலர் தூவி, மெழுகுவர்த்தி ஏற்றி நினைவு கூர்ந்தனர். உலகம் முழுவதும் நவம்பர் 2ம் தேதி கல்லறை திருநாளை கிறிஸ்தவர்கள் முன்னோர்களை நினைவு கூறும் நாளாகக் கடைப்பிடித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவையில் பக்தர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டு, ஒருவருக்கொருவர் ஆறுதல் கூறினர்.