கோவை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குமரி கடலில் உருவான குறைந்த அழுத்த தாழ்வு மண்டலத்தின் தாக்கத்தால், நேற்று முன்தினம் முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இன்று காலை முதல் காந்திபுரம், உக்கடம், ஆலாந்துறை, தொண்டாமுத்தூர், தடாகம், கணுவாய் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் வெப்பம் குறைந்து குளிர்ந்த காலநிலை நிலவியதுடன், சாலைகளில் மழைநீர் தேங்கியது. இருசக்கர வாகன ஓட்டிகள் மழையில் நனைந்து சென்றனர்.