கோவை: ஆளுநருக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் செழியன் கண்டனம்

177பார்த்தது
கோவை அவிநாசி சாலையில் நடைபெற்ற திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் கருத்துக் கேட்பு கூட்டத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் பங்கேற்றார். இதில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கோவை, கரூர், நீலகிரி மாவட்ட தொழில் மற்றும் விவசாய அமைப்பினரிடம் இருந்து கோரிக்கைகள் பெறப்பட்டன. செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், திமுக தேர்தல் அறிக்கை முந்தைய சாதனைகளை முறியடிக்கும் என்றும், பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் முன்னிலை மாநிலமாக திகழ்வதாகவும் தெரிவித்தார். கட்சித் தலைவர் விஜய் திமுக குறித்த விமர்சனம் குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்த அமைச்சர், பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநரின் நிகழ்ச்சியை புறக்கணித்ததற்கான காரணங்களை விளக்கினார். தமிழர்களையும் சட்டமன்ற மாண்பையும் மதித்த பிறகே ஆளுநருடன் ஒரே மேடையில் பங்கேற்பது குறித்து யோசிக்கலாம் என்றும் கூறினார்.

தொடர்புடைய செய்தி