கோவை, ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு தினத்தை முன்னிட்டு வீடு தொடர்பு நிகழ்ச்சி கோவையில் நேற்று நடைபெற்றது. இதில் பா. ஜ. க தேசிய மகளிர் அணி தலைவி மற்றும் எம். எல். ஏ வானதி சீனிவாசன் கலந்து கொண்டு, சின்னமேட்டுப்பாளையம் பகுதியில் வீடு, வீடாகச் சென்று பொதுமக்களை சந்தித்தார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நோக்கங்கள், சேவைப் பணிகள், தேசபக்தி மற்றும் சமூக நல்லிணக்கத்திற்கான பங்களிப்புகளைப் பற்றி அவர் விளக்கினார். மேலும், இயற்கை பேரிடர் மீட்பு, கல்வி உதவி, மருத்துவ முகாம்கள், கிராம மேம்பாடு போன்ற துறைகளில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் தொடர்ந்து செயற்பட்டு வருவதை அவர் குறிப்பிட்டார். இந்நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா. ஜ. க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.