கோவை: இந்தியா ஆன்மிகத்தின் தளம - ராஜ்நாத் சிங்!

2பார்த்தது
கோவை ஈஷா யோகா மையத்தில் நேற்று இரவு 32வது மகா சிவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் உடன் சூர்யகுண்டம், நாகசன்னதி, லிங்கபைரவி கோவில்களில் வழிபாடு செய்தார். பஞ்சபூத வழிபாடு மற்றும் யோகேஸ்வர லிங்கத்துக்கு தீர்த்தம் ஊற்றி யாகவேள்வியைத் தொடங்கி வைத்தார். ராஜ்நாத் சிங் பேசுகையில், 'இந்தியா ஆன்மிகத்தின் தளமாக திகழ்கிறது. சிவன் அனைத்துக்கும் மூலமாக உள்ளார். தமிழ் மொழி மற்றும் கலாசாரம் சரித்திரப் புகழ் பெற்றவை. ஆன்மிகம் தான் பயமற்ற சமுதாயத்தையும், வலுவான நாட்டையும் உருவாக்கும் அடித்தளம். யோகா இந்திய ஆன்மிகத்தை உலகளவில் எடுத்துச் செல்லும் முக்கிய கருவி' என்றார். விழாவில் மராட்டிய முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், நடிகை தமன்னா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி