கோவை: பெரியநாயக்கன்பாளையத்தில் கஞ்சா வைத்திருந்த ஆசாமி கைது

80பார்த்தது
கோவை: பெரியநாயக்கன்பாளையத்தில் கஞ்சா வைத்திருந்த ஆசாமி கைது
பெரியநாயக்கன்பாளையம் பஸ் நிலையம் அருகே நேற்று இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன் தலைமையிலான போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படி நடந்து கொண்ட ஒருவரை பிடித்து விசாரித்தனர். 

விசாரணையில், அந்த நபர் பெரியநாயக்கன்பாளையம் அண்ணா நகரைச் சேர்ந்த செல்வராஜ் (வயது 58) என்பது தெரியவந்தது. மேலும், அவருடைய உடையில் கஞ்சா பைகள் பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, போலீசார் அவரை கைது செய்தனர் மற்றும் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி